சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 11 நவம்பர், 2025
ரோஜா முத்தையா நூலகம் சார்ந்த ஒரு நிகழ்ச்சி
திருவாளர்கள் ஆர் பாலகிருஷ்ணன் நடிகர் சிவகுமார் உட்பட பல கலந்து கொண்டார்கள்
கோவை விஜயா பதிப்பகம் வேலாயுதம் முன்னெடுப்பில் நடந்த இந்த கூட்டத்தில் ரோஜா முத்தையா நூலகத்தின் கட்டிட வளர்ச்சிக்காக நிதி கோரப்பட்டது
வணிக நிறுவனங்கள் சார்ந்த பெரியவர்கள் நிறைய கலந்து கொண்டார்கள் 40 கோடியில் உருவாக்குவது இந்த மையம்
கோவை பேரூர் கலைக் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது
சு.வேணுகோபால்.சுப்ரபாரதிமணியன். காசு வேலாயுதம் பாரதியார் பல்கலைக்கழக முனைவர் சித்ரா போன்றவரும் கலந்து கொண்டார்கள்
கட்டிட நிதிக்கு முதல் தவணையாக ஈரோடு சக்தி மசாலா 25 லட்சம்
நடிகர் சிவகுமார் 10 லட்சம்
ராம்ராஜ் காட்டன் நாகராஜ் 10 லட்சமும் வழங்க ஒப்புதல் தந்தனர் மற்றும் இதற்கு கீழே உள்ள தொகையை பலர் வழங்கினார்கள் பலர்அறிவித்தார்கள்
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (உரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம்) என்பது சென்னை, தரமணியில் அமைந்துள்ள ஒரு தமிழ் நூலகம் ஆகும். இந்நூலகம் 1994 இல் நிறுவப்பட்டு,[2] 1996 இல் ஆராய்ச்சியாளர்களுக்கு திறக்கப்பட்டது. இங்கு 120,000 மேற்பட்ட நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், துண்டறிக்கைகள், விளம்பரங்கள் உண்டு. இந்த நூலகம் சிக்காகோ பல்கலைக்கழக உதவியுடன் பேணப்பட்டது.[3]
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில்[4] இருந்த ரோஜா முத்தையா என்பார் 1950களில் நூல்களை சேர்க்கத் தொடங்கி தம் வாழ்க்கையை இந்நூல் தொகுப்பதற்கும், சேர்த்ததை வரிசைப்படுத்தவுமே முற்றிலுமாய் அர்பணித்து 1992ல் மறைந்தார். அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம் பெருமுயற்சி எடுத்து, இன்று உலகில் உள்ள தமிழ் ஆய்வாளர்கள் அனைவருக்கும் பயன் தருமாறு, இந்நூலகத்தை நிறுவப் பெரிதும் துணைபுரிந்தது. மேற்குலகுக்கு தமிழை ஆழமாக அறிமுகம் செய்த ஏ. கே. ராமானுஜத்தின் புத்தகத்தொகுப்பும் இப்பொழுது இந்நூலகத்துடன் சேர்ந்துள்ளது. 1994இல்[5] தொடங்கப்பட்ட இந்நூலகம் தமிழ்நாட்டில், சென்னையில் அடையாறுக்கு அருகே தரமணியில் உள்ளது.[6]
நூலகத்தின் முகவரி: ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், 3வது குறுக்குச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 600113. இந்நூலகம் காலை 9.30 முதல் மாலை 5 மணிவரை செயல்படுகிறது.[7]
நூலகம்
[தொகு]
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (ஆர்.எம்.ஆர்.எல்) தென்னிந்திய ஆய்வுகளுக்கான ஒரு வள மற்றும் ஆராய்ச்சி மையமாகும், இது மனிதநேயம், சமூக அறிவியல் முதல் பிரபலமான கலாச்சாரம் வரை பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. இந்நூலகம் ஒரு தனித்துவமான தொகுப்பைக் கொண்டுள்ளது மற்றும் இந்தியாவில் ஒரு மாதிரி நூலகமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ரோஜா முத்தையாவின் ஒரு சிறிய தொகுப்பாக, நூலகம் இப்போது 3,00,000 நூல்களைக் கொண்டுள்ளது, மேலும் வரலாற்று காப்பகத்தை தொடர்ந்து பாதுகாத்து விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோட்டையூரைச் சேர்ந்த ரோஜா முத்தையா செட்டியாரின் முன்னோடி முயற்சிகளில் ஒன்றாக இந்நூலகம் திகழ்கிறது .[8] முத்தையா ஓவியக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், விரைவில் பழங்கால புத்தகங்களால் ஈர்க்கப்பட்டார். மற்றும் 1950 இல் பழங்கால தமிழ் இலக்கியங்களை சேகரிக்கத் தொடங்கினார். 1992 இல் அவர் இறக்கும் போது, இந்தத் தொகுப்பில் தமிழில் கிட்டத்தட்ட 1,00,000 நூல்கள் இருந்தன, அதில் புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் பல இலக்கியங்கள் இருந்தன. நூலகத்தின் முக்கியத்துவத்தையும் அதன் மதிப்புமிக்க உள்ளடக்கங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் புரிந்துக்கொண்டு சிகாகோ பல்கலைக்கழகம் 1994 இல் முழு தொகுப்பையும் வாங்கியது. இருப்பினும், நூலகம் தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள நிலையில், ஒரு ஆராய்ச்சி நூலகத்தின் கருவை உருவாக்குவதற்கு இந்த தொகுப்பு தமிழகத்தில் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறங்காவலர் குழு இப்போது சிகாகோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் முத்திரைகளின் இந்த அரிய தொகுப்பை பராமரிக்கிறது.
தொகுப்புக்கள்
[தொகு]
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ள பரந்த தொகுப்பு தமிழ் அச்சு பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் நேரடி பிரதிபலிப்பாகும், இது 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான நூல்களைக் கொண்டுள்ளது, 1804 இல் வெளியிடப்பட்ட 'காந்தரந்ததி' என்ற தலைப்புள்ள ஒரு நூல் இந்நூலகத்துடன் சேர்ந்துள்ளது.. மொழி மற்றும் இலக்கியம், சுதேச மருத்துவம், மதம், நாட்டுப்புறவியல், பிரபலமான கலாச்சாரம், இயற்பியல், காந்திய ஆய்வுகள், பெண்கள் ஆய்வுகள் மற்றும் நவீன வரலாறு ஆகியவற்றை உள்ளடக்கியது. திருமண அழைப்பிதழ்கள் மற்றும் தனியார் கடிதங்கள் போன்றவற்றையும் கொண்டுள்ளது. இந்த தனித்துவமான தேர்ந்தெடுக்கப்பட்ட வரம்புதான் மற்ற நூலகங்கள் மற்றும் காப்பகங்களிலிருந்து தமிழுக்கு ஒரு தொன்மை மொழியின் அந்தஸ்து வழங்கப்படுவதையும், உலகளவில் அறுபது மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமிழ் பேசுவதையும் கருத்தில் கொண்டு, நூலக ஆராய்ச்சி மற்றும் புலமைப்பரிசில் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க நிறுவனமாக தன்னை முன்வைக்கிறது.
மனித வளம்
[தொகு]
சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளை (ஆர்.எம்.ஆர்.எல்.டி) சிந்து அல்லது ஹரப்பன் நாகரிகத்தின் பல்வேறு அம்சங்கள், குறிப்பாக சிந்து சமவெளி எழுத்துகள் குறித்து விஞ்ஞான விசாரணைகளை மேற்கொள்வதற்காக 2007 ஜனவரியில் சிந்து ஆராய்ச்சி மையத்தை (ஐ.ஆர்.சி) நிறுவியது. சிந்து எழுத்துகளில் நன்கு அறியப்பட்ட ஆராய்ச்சியாளரான ஐராவதம் மகாதேவன்[9] தனது ஆயுட்காலம் வரை இந்த மையத்தின் கௌரவ ஆலோசகராக இருந்தார். இது இந்த துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள விரும்பும் அனைத்து நேர்மையான அறிஞர்களுக்கும் திறந்திருக்கும்.[10]
Subrabharathimanian Endownment Talk in Gandhigramam Univercity, Madurai
Talk on works of va keera by Tamil manavalan in December
Novel .. குமரி : எழுத்தாளரும் இயக்குனருமான கீரா
1
சிந்து சமவெளி நாகரிகம் குறித்த காலகட்டத்து வாழ்வைப் பற்றியே படைப்புகள் வராத சூழலில், அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சார்ந்த கடலால் விழுங்கப்பட்ட நாகரிகமான குமரிக்கண்டத்து பண்டையத் தமிழர் வாழ்வியலை, தாய்வழிச் சமூக நெறிகள் மற்றும் தமிழ்ச்சமூகத்தின் வரலாற்றின் மீதான புனைவாக இந்த நாவல் வியப்பூட்டுகிறது. நம்மிடம் இப்போது இல்லாதுபோன அலங்கு என்கிற நாய் இனம், பலவிதமான யாளிகளான மகர (ஆடு) யாளி, சிம்ம யாளி, யானை யாளி பற்றிய இந்த நாவலில் வரும் விவரணைகள், அழிந்துபோன டைனோசர்கள், சங்க இலக்கியத்தில் இளங்கோவடிகள் குறிப்பிடும் விலங்கு, நற்றினையில் பேசப்பட்ட விலங்கு, கிரேக்க புராணங்களில் வரும் பீனிக்ஸ் பறவை, சீன ஜப்பானியர்கள் உருவகப்படுத்துகிற டிராகன் ஆகியவைபோல, தமிழ் இலக்கியங்கள் பேசுகிற யாளிகள் கற்பனை மிருகமா அல்லது அப்படி ஒரு விலங்கு வாழ்ந்து அழிந்துவிட்டதா? வரலாற்றின் மீதான புனைவுகள் மிக அவசியமான ஒன்று. ராமாயணம், மகாபாரதம் மற்றும் சேர சோழ பாண்டியர்கள் மீதான புனைவுகளுக்கே பழக்கப்பட்ட நமக்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான பழந்தமிழர்கள் வரலாற்றுக் குறிப்புகளின் மீதான புனைவு என்ற வகையில் ‘குமரி’ மிகவும் அவசியமான ஒன்று. -கரன் கார்க்கி
2
எழுத்தாளரும் இயக்குனருமான கீரா எனது பல வருட நண்பர். அவரும் நானும் கிட்டதட்ட ஒரே காலகட்டத்தில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து படைப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து உரையாடியே நெருங்கிய நண்பர்கள் ஆனோம். என்னிடம் அவர் சொன்ன கதைகள், சம்பவங்களை வைத்தே குறைந்தது மூன்று செறிவான புதிய கதைக்களன் கொண்ட பெரிய நாவல்களை அவர் இந்நேரம் எழுதியிருக்க முடியும். சினிமாவும், சினிமா எடுப்பதற்கான கடுமையான பிரயத்தனமும் மட்டும் அவரது படைப்புகள் முற்றிய நாட்களில் பெரும்பகுதி எடுத்துக்கொண்டது உண்மை. ஆனாலும் அவருக்குள் இருக்கும் தீவிர படைப்பாளியை அவ்வப்போது சிறுகதைகளாக வெளிபடுத்தினார்.தமிழு, நிறமற்றவளின் கண்கள், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, ஒரு சைக்கிளின் கதை போன்ற அவரது கதைகள் யதார்த்த தளத்தில் அமைந்த துள்ளிய காட்சி சித்திரிப்பை அளித்து தெரிந்த விளம்புநிலை மக்களின் தெரியாத வாழ்க்கையை கூறின. கதைகளை தொகுத்து புத்தகமாக்கவும் அவர் மெனக்கெடவில்லை. பின்னர் நண்பர்களின் தொடர்ந்து நச்சரிப்பும், யாவரும் பதிப்பக ஜீவகரிகாலன்,வேல்கண்ணன் போன்ற நண்பர்களின் தொடர் முயற்சியால் மோகினி என்ற பெயரில் தொகுப்பு 2017 ஜனவரி சென்னை புத்தக கண்காட்சியை ஒட்டி வெளிவந்து பரவலான கவனத்துக்கு உள்ளானது. அதன் பின்னர் அவரது படப்பிடிப்புகள், கதை விவாதம், லொகேஷன் பார்க்க போதல் என்று சினிமா அவரின் பெரும்நேரத்தை எடுத்துக் கொண்டது. அவருடன் இரவு நேரங்களில் எழுதிக்கொண்டிருக்கும் பெரிய நாவலான ‘’குமரி’’ குறித்து என்னிடம் விவாதிப்பார். அதன் காட்சிகளை கேட்கும் போது, ‘’ விரைவில் எழுதி முடியுங்க தோழர், நீங்க சொல்லும் போதே விரைவில் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது’’ என்பேன். ஒரு சிறிய புன்னைகையை பதிலாக கொடுப்பார். யாவரும் சிறுகதை போட்டியில் கொரனோ காலக்கட்டத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட சிறந்த சிறுகதையாக அவரது ‘’ சதுரங்க வட்டம்’’ தேர்வு பெற்றது. பின் நவீனத்துவ பாணியில் எழுதப்பட்ட சிறந்த கதை இது. விரைவில் பரிசு பெற்ற சிறுகதைகளை தொகுத்து யாவரும் பதிப்பகம் புத்தகமாக கொண்டு வர இருக்கிறது. அந்த தொகுப்பில்‘’ சதுரங்க வட்டம்’’ இடம் பெறுகிறது. போன வருட(2020) கொரனோ லாக் டவுனில் குறுநாவல் ஒன்றை எழுத ஆரம்பித்து இருப்பதாக கூறினார். அதுதான் ‘’பாரி ஆட்டம்’’ குறுநாவல்.
இந்த ஆண்டு பிப்ரவரி 2021இல் நடத்தப்பட்ட சென்னை புத்தக கண்காட்சியில் புலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பரவலான வாசகர்களால் விரும்பியும் வாங்கப்பட்டது. முக்கியமாக திரைப்படத் துறையை சேர்ந்த பல நண்பர்கள் வாங்கிப் போனார்கள். கதைப்போக்கில் அமைந்திருந்த ஒருவகையான திரில்லர் தொனி அவர்களை மிகவும் கவர்ந்தது. ஆனாலும் வெகுஜன நாவல் வகைமைக்குள் பாரி ஆட்டத்தை சேர்க்க இயலாது. தீவிரமான மன உணர்வுகளை அளிக்கும் வாழ்க்கை முறையையும் இந்த கதையில் சொல்லியிருக்கிறார். பின் நவீனத்துவம் கொடுத்திருக்கும் கதை சொல்லலின் சுகந்திரம், கதையின்றி கதை மொழிதல், சில வரிகளில் ஒரு கதாபாத்திரங்களை வரையறுத்தல், தேவையற்ற விளக்க உரைகளை தவிர்த்தல் ஆகிய நுட்பங்கள் அனைத்தும் பாரி ஆட்டத்தில் துணிந்து செயல்படுத்தி பார்த்திருக்கிறார் வ,கீரா. இந்த நுட்பங்கள் எதுவும் வாசகனை உறுத்தாமல் சீரான கதை சொல்லலால் தடையின்றி வாசிக்க வைத்திருக்கிறார்.
தமிழ் இலக்கியத்தில் குறுநாவல் வடிவத்தில் தான் அதிகமும் சாதனைகள் நிகழ்த்திருக்கிறது. சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், ஜி.நாகராஜனின் குறத்தி முடுக்கு, தி.ஜானகிராமனின் அடி, அசோகமித்திரனின் இன்று, கி.ராஜாநாராயணனின் கிடை, ஆர்.சண்முகசுந்திரத்தின் அறுவடை , லாசாராவின் புத்ர, வண்ணநிலவனின் கம்பாநதி, ஜெயமோகனின் டார்த்தீனியம், சு. வேணுகோபாலின் கூந்தப்பனை போன்று இன்னும் பல வரிசையில் உள்ளது. வைக்கம் முகம்மது பஷீரின் மதிலுகள்( நீல. பத்மநாபனின் தமிழ்மொழி பெயர்ப்பு) மலையாள மொழிபெயர்ப்பு என்றாலும் குறுநாவலின் உச்சபட்ச சாதனைக்கும் வடிவத்துக்கும் துல்லியமான எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
போன வருடம் குற்றப் பின்னனியில் அமைந்த இரண்டு குறுநாவல்களை படித்தேன். ஒன்று சீரியல் கில்லரை( தொடர் கொலைகாரன்) யாரென்று கண்டுபிடிக்கும் வகையில் அமைந்த நந்தன் ஸ்ரீதரனின் படுகளக் காதை, அவரின் திரைக்கதை ஒன்றை குறுநாவல் வடிவில் மாற்றி எழுதியிருந்தார். ஒரு மனிதனின் வாழும் சூழல் எவ்விதம் குற்றப் பின்னணியில் சிக்க வைக்கிறது என்பதை மெல்லிய நீரோட்டமாக எழுதியிருந்த என்.ஸ்ரீராமின் அத்திமரச்சாலை. இந்த இரண்டு நாவல்களில் இருந்து வேறுபட்டு ஒரு உலகத்தை அறிமுகப்படுத்துகிறது பாரி ஆட்டம்.
முப்பது வருடங்களுக்கு முன் நடக்கும் யாரும் சொன்னாலும் நம்ப முடியாத கிராமிய கதை, இன்னொருபுறம் சமகாலத்தில் கொடைக்கானலில் வயதுப்பெண்கள் வரிசையாக கொலை செய்யப்படுகிறார்கள். கொலைகாரன் பற்றி எந்த துப்பும் கவலர்களுக்கு கிடைக்காமல் அலைகிறார்கள். இவ்வாறு இரண்டு கால கட்டங்களில் கதை சொல்லப்பட்டு ரயில் பாதையின் இரு வேறு தண்டவாளங்கள் இணைவது கதையின் முடிவை நோக்கி கோர்த்திருக்கிறார் கீரா. கடந்த காலத்தின் கதைக்கு வாய்மொழி கதைமொழியின் கூறல் முறையையும், நிகழ்காலத்தின் கதைக்கு விறுவிறுப்பான மர்மநாவலின் கூறல் முறையையும் பயன்படுத்தி எழுதியிருக்கிறார் கீரா. ஆனால் கதாபாத்திரங்களின் மன ஒட்டத்தை மிக துல்லியமாக சித்தரித்து எழுதியிருப்பது நாவலை மிகுந்த நம்பகத் தன்மைக்குள் கொண்டுவந்து விடுகிறது.
மாச்சாப்பு, வெள்ளையன், மாரியாயி என்ற மூவரை மையமாக வைத்து கடந்த கால கதை நகர்கிறது. சிறிய அளவிலான நிலத்தை வைத்திருக்கும் மாச்சாப்பு, வெள்ளையன் இருவரும் அண்ணன், தம்பிகள். மழை வந்தால் விவசாயம், இல்லையென்றால் ஆடுகளை மேய்த்து அதனை விற்பதன் மூலம் வரும் பணத்தை வைத்து காலத்தை ஓட்டுகிறார்கள். அண்ணனுக்கு எந்த இடத்திலும் பெண் அமையவில்லை. அதனால் தம்பி வெள்ளையனுக்கு திருமணம் செய்துவிட முடிவெடுக்கிறான். ஆனால் தம்பி வெள்ளையன் ஒத்துக்கொள்ள மறுக்கிறான், சில சம்பவங்களுக்கு பிறகு அண்ணன் தம்பி இருவரும் மாரியாயியை மணந்து கொள்ளும் சூழல் வருகிறது. ஊரார் கேலி பேசினாலும் மாரியாயி எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருவரையும் தீர்க்கமான முடிவுடன் திருமணம் செய்து கொள்கிறாள். குடிசை வீட்டின் கூரையை மாற்றி, அவர்கள் நிலத்தில் கடன் வாங்கி கிணறு தோண்டி, அறுவடை செய்து புகுந்த வீட்டை கரை ஏற்றிவிடுகிறாள். அவளுக்கு ஒரு மகன் பிறக்கிறான். மாச்சாப்பு, வெள்ளையன் இருவரும் மகிழ்கிறார்கள். தங்கள் பட்ட கஷ்டம் தனது மகன் படக்கூடாது என தங்களின் வசதிக்கு மேல் செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். செட்டிக்குளம் என்ற கிராமத்தில் இந்தக்கதை நடக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன் இருந்த கிராமிய வாழ்வை அப்படியே அசலாக கொண்டு வந்திருக்கிறார். ஒரு பெண் எவ்வாறு இரு ஆண்களை திருமணம் செய்யமுடியும் என்கிற இடத்தில் கத்தி மேல் நடப்பது போன்ற சவாலை மிகுந்த துல்லியத்துடன் எழுதியிருக்கிறார். மாரியாயி அவளின் அம்மா எடுக்கும் முடிவுகளும் அதை இயற்கையாக நகர்த்தி சென்ற விதமும் எழுத்தாளனின் திறமைக்கு எடுத்துக்காட்டு. இப்படி நிகழுமா? என்கிற போது நிகழும், நிகழ்த்திருக்கிறது என்று ஒரு கதையை நம்பகத் தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.
அந்தக் காலத்தில் நிலத்தில் கிணறு வெட்ட நீர்ப்பிடிப்பு பார்க்க வரும் சன்னாசி, துண்டில் தேங்காயை போட்டு முறுக்கிக் கொண்டு பார்க்கிறார். அந்த நிலத்தில் இருக்கிற கரையான் புற்று தான் நீரை கண்டுபிடித்து தருகிற வித்வான் என்கிறார். கிணறு தொண்டி நீர் கசிய ஆரம்பித்ததும் மாட்டுசாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்டு முதல் நீரை அருந்தக் கொடுப்பது போன்ற மறைந்து போன அல்லது மறந்து போன நாட்டுப்புற சடங்குகள் அனைத்தையும் நுட்பமான விவரணைகள் மூலம் நினைவுபடுத்தியிருக்கிறார் கீரா.
நிகழ்காலத்தில் நடைபெறும் கதையில் கொடைக்கானலில் தொடர்ந்து இளம்பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார்கள். அந்த வழக்குகளை விசாரிக்கும் இளம் ஆய்வாளன் கார்த்திக் எந்த துப்பும் சரியான முறையில் கிடைக்காமல் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் மேலதிகாரிகளிடம் பதில் சொல்லவும் முடியாமல் தவிக்கிறான். சினிமாவுக்கு முயற்சி செய்து தோற்று வேறுவழியில்லாமல் கொலையுண்டவர்களை காவலர் தரப்பின் சாட்சிகளுக்குக்காக படம் பிடிக்கும் முருகனின் கதையும் சொல்லப்படுகிறது. இப்படி நிகழ் காலத்தையும், கடந்த காலத்தையும் இணைத்து விளையாடும் ஆட்டத்தை பாரி ஆட்டம்(கிராமங்களில் சிறுவர்கள் ஆடும் விளையாட்டு) குறுநாவலில் அந்த விளையாட்டைப் போலவே குற்றங்களின் தோற்றுவாயை துல்லியமாக சொல்லியிருக்கிறார் கீரா.
பொதுவாக குறுநாவல் எழுத்தாளருக்கு மிகுந்த சவால் அளிக்கக் கூடிய வடிவம்! சிறுகதைக்குரிய வேகமும், நாவலுக்குரிய களமும், சிக்கலும் இருந்தாக வேண்டும். ஆனால் நாவலுக்குரிய இடம், பக்கங்கள் இங்கு இருக்காது. 70, 80 பக்கங்களில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்க வேண்டும். இதை எந்த நுட்பமும் குறையாமல் எண்பது பக்கங்களில் அனாசயமாக சாதித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் வ.கீரா. மிக புதிய களம், நுட்பமான விவரணைகள், இரு விதமான கதை சொல்லல் என ஒரே அமர்வில் படிக்க வைத்து புதிய அனுபவத்தை தருகிறது பாரி ஆட்டம் குறுநாவல். இந்தப் பிரதி இன்னும் இவரிடம் இருந்து வீரியமான படைப்புக்களை எதிர்பார்க்க வைக்கிறது.
– விஜய் மகேந்திரன்
நூலாசிரியர் குறித்து:
1.
கீரா திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். ‘’பச்சை என்கிற காத்து’’, ‘’மெர்லின்’’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ள கீரா, சமீபத்தில் ''பற'' என்னும் திரைப்படத்தை இயக்குநரும் நடிகருமான சமூத்திரக்கனியை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு இயக்கிருக்கிறார். இவர் எழுதிய சிறுகதைகளை தொகுத்து “மோகினி” எனும் பெயரில் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை யாவரும் பதிப்பகம் 2016- ஆம் ஆண்டு வெளியிட்டது.
'கலகம் - தேசிய கலை இலக்கியத்தடம்' என்ற அமைப்பை ஆரம்பித்து பல எழுத்தாளர்களின் சிறந்த புத்தகங்களுக்கு கூட்டங்கள் நடத்தியுள்ளார். கலகம் விருதுகளையும் வருடந்தோறும் பல்வேறு கலை, இலக்கிய சமூக தளங்களில் பணிபுரிபவர்களுக்கு வழங்கி வருகிறார்.
0
3
கீரா முதலில் கிராமப்புற நாடகமான பச்சை எங்கிரா காத்து (2012) இல் புதுமுகங்கள் முன்னணி வேடத்தில் நடித்தார். படத்தின் தயாரிப்பின் போது, அவர் படத்தின் அறிமுக நடிகை சரண்யாவுக்கு தேவதை என்ற மேடைப் பெயரைக் கொடுத்தார். [ 1 ] 2010களின் பிற்பகுதியில், கீரா சமுத்திரக்கனி தலைமையிலான கௌரவக் கொலைகளை அடிப்படையாகக் கொண்ட எட்டுத்திக்கும் பரா (2020) என்ற சமூக நாடகத் திரைப்படத்தில் பணியாற்றினார். இந்தத் திரைப்படம் மார்ச் 2020 இல் வெளியிடப்பட்டது மற்றும் COVID-19 தொற்றுநோய் ஊரடங்கை ஏற்படுத்துவதற்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இறுதிப் படங்களில் ஒன்றாகும் . [ 2 ] [ 3 ]
டிசம்பர் 2018 இல், முன்னாள் நடிகர்-அரசியல்வாதி எம்.ஜி.ராமச்சந்திரனின் தூரத்து உறவினரான ஜூனியர் எம்.ஜி.ஆர் முக்கிய வேடத்தில் நடிக்கும் குறவன் என்ற திட்டத்தில் தான் பணியாற்றி வருவதாக கீரா அறிவித்தார் . பழங்குடி ஆர்வலர்களின் தலைப்புக்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, இந்த திட்டம் இரும்பன் (2023) என்ற பெயரில் தொடர்ந்தது. படத்தின் வெளியீட்டின் போது, கீராவின் பெயர் விளம்பர சுவரொட்டிகளில் இருந்து பெரும்பாலும் நீக்கப்பட்டது, இதனால் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும், பணம் செலுத்தப்படாததாகவும் அவர் குற்றம் சாட்டினார். [ 4 ] [ 5 ]
ஜனவரி 2023 இல், தனது அடுத்த திட்டத்திற்கு "வீமன்" என்று பெயரிடப்படும் என்று அறிவித்தார் , இது யானைப் பாகன்கள் பற்றிய ஒரு கதை.
திரைப்படவியல்
[ திருத்து ]
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2012 பச்சை எங்கிரா காத்து
2018 மெர்லின்
2020 எட்டுத்திக்கும் பாரா
2023 இரும்பன்
Thirai kathi
உடுமலை வட்டாரத்தில் ஜீலை மாதத் தொல்லியல் பயணம்: சுப்ரபாரதிமணியன்
1. சரித்திரத் தொன்மக்கதைள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றையெல்லாம் எப்படி படைப்பிலக்கியத்துள் கொண்டு வருவது. சவாலும், சலிப்பும் ஏற்பட்டது.
2. . கிராம வாழ்க்கை பற்றிய ஏக்கம் தொடர்கிறது . மாயையல்ல அது.
3. பயணம் எப்போதும் ஆசுவாசம்தான்
0 ஐவர்மலை.
பழனி - கொழுமம் சாலையில் பாப்பம்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஐவர்மலை. வெளியுலகுக்கு பரவலாக தெரியும் இந்த மலை, பல ஞானிகளையும், சித்தர்ர்களையும் உள்ளடக்கியது..
0
சமணர்கள் தங்கியிருந்த அயிரமலையை பிள்ளைமார் எல்லாம் சேர்ந்து பஞ்ச பாண்டவரை குறிக்கும்
ஐவர் மலை என்றும்
திரௌபதி அம்மன் கோயில் என்றும் மாற்றிவிட்டனர்.perur jayaraman
ஐவர்மலை திரவுபதி அம்மன் கோவில். இந்தக் கோயில் திண்டுக்கல் மாவட்டத்திலிருக்கும் பழமையும் பெருமையும் வாய்ந்த கோயில்களில் ஒன்று.
சங்ககாலம்
ஐயூர் என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் ஐயூர் முடவனார். முடம் பட்டிருந்த இந்தப் புலவர் உறையூர் வேந்தன் கிள்ளி வளவனைக் காணச் செல்லும் வழியில் தாமான் தோன்றிக்கோனைக் கண்டார். வளவனிடம் செல்கையில் தன் வண்டியை இழுக்க எருது ஒன்று வேண்டும் எனக் கேட்ட புலவர் ஏறிச்செல்லத் தேர்வண்டியும் அதனை இழுத்துச்செல்ல புலவர் விருப்பப்படி எருது வழங்கியதோடு, ஆனிரை கூட்டத்தையே பரிசிலாக வழங்கினான். [1] ஐவர்மலையிலிருந்து தான்தோன்றிக்கோன் ஆண்ட தான்தோன்றிமலை வழியாக உறையூர் செல்லப் புலவர் திட்டமிட்ட வரிசையை எண்ணும்போது ஐயூர் மலையே ஐவர்மலை என மருவிற்று எனக் கொள்ளுதல் அமையும்.
தல வரலாறு
வன வாசத்தின் போது பஞ்சபாண்டவர்கள் பாஞ்சாலியுடன் ஐவர் மலையிலும் வசித்ததாக கூறுவதால் இம்மலை ஐவர் மலை எனப் பெயர்பெற்றதாக கூறுகின்றனர். போகருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது.
இந்த தோஷம் போக போகர் வேள்வி ஒன்று நடத்துகிறார். வேள்வியின் முடிவில் புவனேஸ்வரி அம்மன் தோன்றி இந்த தோஷம் போக வேண்டுமானால் நவபாஷானத்தினால் ஆன முருகன் சிலை ஒன்று செய்து அந்த முருகன் சிலையை பழனியில் வைத்து வழிபடும் படி கூறினாள். போகரும் இந்த பொறுப்பை தனது சீடரான புலிப்பாணியிடம் ஒப்படைத்தார்.
தல சிறப்பு
1. ஐவர்மலை தலத்தில் சூரியபுஷ்கரிணி,சந்திர புஷ்கரிணிகளின் அமைப்பு சிறப்பானது. சூரியனின் கதிர்கள் தாமரை மலர்கள் மீதும், சந்திரனின் கதிர்கள் அல்லி மலர்கள் மீதும் விழும்படியான அமைப்பு. ஆடி அமாவாசை தினத்தில் சூரிய சந்திர கதிர்கள் ஒரே நேர் கோட்டில் அமைந்து கதிர்கள் இந்த ஐவர் மலையில் விழுவதாக நம்புகிறார்கள். இந்தக் காரணங்களுக்காக ஆடி அமாவாசை தினங்களில் இந்த ஐவர் மலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகின்றனர்.
2. மற்றொரு சிறப்பு உச்சிப்பிள்ளையார் சன்னதியில் ஆடி அமாவாசை அன்று ஏற்றப்படும் தீபம் எப்படிப்பட்ட காற்றுக்கும் ஆடாது அணையாது.
3. ஐவர் மலை தலத்தில் விநாயகர் உச்சிப்பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
4. பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகர் துவாபரயுகத்தில் இங்கு வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்.
தலபெருமை
1. போகர் பழனி மலைகோவிலில் உள்ள முருகனை இந்த மலையில் தங்கியிருந்து உருவாக்கியதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் எந்த ஆதாரமுமில்லை. ஐவர்மலை பழனிக்கு தாய் வீடு என்கிறார்கள்.
2. நாராயணபரதேசி என்ற பரதேசி சுமார் 150 வருடங்களுக்கு முன் ஐவர்மலைக்கு வந்தார். கொற்றவை விக்ரகத்துடன் கோயில் ஒன்றை கட்டுகிறார். நாராயணபரதேசி மட்டும் இங்கே முக்தியடைந்துள்ளார்கள். மற்றும் அவர் சீடர் பத்மநாபா களஞ்சிகாட்டில் முக்தியடைந்துள்ளார்கள்.
3. பெரியசாமி என்பவர் இம்மலையில் பலருக்கு தியானம், யோகா, போன்றவற்றை கற்பித்து பின் இங்கேயே முக்தியடைந்துள்ளார். இங்கு பெரியசாமிக்கு சிலையும் அவரது சமாதி மேல் கோயிலும் அமைந்துள்ளது. பெரியசாமியின் ஒரே சீடர் பெருமாள்சாமி குடும்பத்துடன் ஐவர் மலையில் வசிக்கிறார்.
4. இப்போது இம்மலையில் யோகா, தியானம் ஆகியவற்றை யாரும் சொல்லித் தரவில்லை. தற்போது இங்கு சாந்தலிங்கம் என்ற இளந்துறவியும் பயனர் யோகிசிவம் ஆக இருவர் மட்டும் உள்ளனர்.
5. இம்மலையின் மேற்கு பகுதியில் உள்ள சம தளத்தில் குழந்தைவேலப்பர் கோவிலில் மற்றுமொரு சிறப்பு நவக்கிரகங்கள் வட்டவடிவில் ஒன்றை ஒன்று பார்க்காதவாறு அமைக்கப்பட்டுள்ளது.
6. கூன் பாண்டியன் காலத்தில் துரத்தியரடியடிக்கப்பட்ட சமண முனிவர்கள் தப்பித்து இங்கு வந்து தங்கி வாழ்ந்துள்ளார்கள். இதனை இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
7. இடும்பன் சன்னதி பழனியைப்போலவே இங்கும் சிறப்பு.
8. ஐவர்மலைக்கு வந்து வழிபட்டால் பஞ்ச பூத தலங்களை வழிபட்ட பலன் கிடைக்கிறது என்கிறார்கள்.
9. யோக நிலையில் துரியம் என்பது மனம் புலன்களுடன் பொருந்தும் நிலையை குறிப்பதாகும். இதனை யோக சாதகம் செய்பவர்கள் உணரும் வண்ணம் இந்த மலையின் உச்சியில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.
உச்சிப்பிள்ளையார் சன்னதியில் விளங்கும் பஞ்சபூத அமைப்பு
[தொகு]
நீர்-சூரியசந்திர புஷ்கரிணி தீர்த்தம்,
நிலம்- மலை (மலையே நிலத்தில் தான் அமைந்துள்ளது).
நெருப்பு -ஆடி அமாவாசை தினத்தில் ஏற்றப்படும் தீபம்
காற்று - இங்கு எப்படிப்பட்ட காற்றுக்கும் தீபம் ஆடாது அணையாது.
ஆகாயம் - மலைக்கு மேல் பரந்து விரிந்த ஆகாயம்.
பஞ்ச பூதங்களும் ஒன்று கூடும் ஆடி அமாவாசை வழிபாடு பஞ்சபூத தலங்களுக்கு போய் வந்த பலன் தரவல்லது.
wikkipiidiyaa
0
2..கொழுமம் தாண்டேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.
]
இக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொழுமம் என்னுமிடத்தில், அமராவதி ஆற்றின் தென்கரையில், அமைந்துள்ளது. இவ்வூர் முன்னர் சங்கர ராமநல்லூர் என்றழைக்கப்பட்டது. குமண மன்னர் ஆட்சி செய்ததால் குமணன் நகர் எனவும், வணிகக்குழுக்கள் அதிகம் குழுமியிருந்த இடமாகக் காணப்பட்டதால் குழுமூர் எனவும் இவ்வூர் அழைக்கப்பட்டது.அது பின்னர் கொழுமம் என்றானதாகக் கூறுவர். [1]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக தாண்டேசுவரர் உள்ளார். இவர் சோழீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பெரிய நாயகி ஆவார். வில்வம் இக்கோயிலின் தல மரமாகும். கோயிலின் தல தீர்த்தமாக அமராவதி உள்ளது. திருவாதிரை, ஆருத்ரா தரிசனம், ஆனி உத்திரம், மகாசிவராத்திரி பௌர்ணமி உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன. [1]
அமைப்பு
சிதம்பரத்தில் உள்ளது போல நடராசர் ஆனந்தத் தாண்டவத்தில் இடது காலை தூக்கிய நிலையில் உள்ளார். அவர் சுமார் ஐந்தரை அடி உயரத்தில் காணப்படுகிறார். இந்த அமைப்பின் காரணமாக இத்தலம் தென் சிதம்பரம் என்றழைக்கப்படுகிறது. மூலவருக்கு இடது புறம் தனி சன்னதியில் இறைவி உள்ளார். அவருக்கு முன் ஜேஷ்டாதேவி, திருச்சுற்றில் சுந்தர விநாயகர், பால முருகன், அய்யப்பன், மகாவிஷ்ணு, பைரவர், துர்க்கை, நவக்கிரகங்கள், மேற்கு நோக்கிய நிலையில் சனீசுவரன், சந்திரன், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் உள்ளனர். கல் மண்டபம் போன்று காணப்படுகின்ற கருவறையின் பின்புறம் அக்னீசுவரர் சன்னதி உள்ளது.[1]
0
wikipidia
0
கணியூர் சொக்கநாதசாமி கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், கணியூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
வரலாறு
இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
[
இக்கோயிலில் சொக்கநாத சுவாமி, மீனாட்சி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
0
நாலு நாள் பயணம் . பல கோயில்கள், பல கல்வெட்டுகள்
சரித்திரத் தொன்மக்கதைள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றையெல்லாம் எப்படி படைப்பிலக்கியத்துள் கொண்டு வருவது. சவாலும், சலிப்பும் ஏற்பட்டது
நெசவுச் சிறுகதைகள் / சுப்ரபாரதிமணியன்
தொகுப்பாசிரியர் : பொன் குமார்
0
பொன் குமார் தொகுப்பு நூல்களின் சிகரம்.இந்த நூல் சிகரத்தில் ஒரு முத்து.
இதில் 18 முத்தான கதைகள் நெசவாளர் வாழ்வியலைச்சொல்லும் கதைகள். ஆர். சண்முகசுந்தரம் முதல், சுப்ரபாரதிமணியன், பல்லவி குமார் வரைக்கும்.
ஆர். சண்முகசுந்தரம் கதை:
பரிகாரம் ஜீவனம் : ஆர். சண்முகசுந்தரம் கொங்கு மண்ணின் மனிதர்களைப் பற்றி நிறைய எழுதியவர். அவர் சார்ந்த முதலியார் சமூகத்தை பற்றி நிறைய எழுதி இருக்கிறார். இதுலயும் சென்னியப்ப முதலியார் என்ற நெசவாளர் பற்றிய கதை எழுதி இருக்கிறார். அவர் வாழ்க்கையில் உள்ள சிரமங்கள் தினசரி நெசவு வேலைகள் பற்றி எழுதி இருக்கிறார் மனிதருடைய வாழ்க்கையில் தூக்கம் பாதிவாழ்க்கையை வீணாக்கி விடுகிறது என்பார்கள் ஆனால் தூக்கம் இல்லாத இருந்தால் என்னவாக இருக்கும் என்று அந்த கதை முடிகிறது. சிறந்த கதை
வாழ்வுக்கே ஒரு நாள் என்ற ஒரு கதை தொமுசி ரகுநாதன் அவர்கள் எழுதியது. இவர் எழுதிய பஞ்சும் பசியும் தமிழின் முதல் சோசலிச யதார்த்த வகை நாவல் என்பதாக உள்ளது இதில் உள்ள சுப்பையா முதலியார் என்ற ஒரு நெசவாளியை பற்றி கதையைச் சொல்கிறார். இவர் சேலையை விற்பவராக இருக்கிறார் ஆனால் அந்த சேலை தீபாவளி சமயத்தில் கூட சரியாக விற்பதில்லை ஆனாலும் அவர் மனைவியிடம் காட்டும் சிறு அன்பு என்பது எப்போதைக்குமானதாக இருக்கிறது.
சுப்ரபாரதி மணியனின் துண்டு துணி என்ற கதையில் சேலையில் நெய்கிற போது மிச்சமாகிற துண்டுத் துணியை பெண்கள் ஜாக்கெட்டாக பயன்படுத்துவார்கள் அல்லது அதை விற்று சினிமா பார்க்க பயன்படுத்துவார்கள். இந்த அனுபவம், ஒரு குடும்பத்தில் நிகழும் சின்ன சின்ன சந்தோஷங்களை பற்றி இந்த கதை சொல்கிறது
பார்வைகள் என்ற சுப்ரபாரதி மணியனின் கதையில் ரங்கசாமி என்ற நெசவாளர் பற்றி சொல்லப்படுகிறது. தங்களுடைய கூலி சார்ந்த போராட்டம் பெரிதாக ஆகும் என்று பயந்து அவர்கள் மனது நடுங்குவது பற்றிய சித்திரங்கள் இந்த கதையில் உள்ளன சுப்ரபாரதி மணியின் கீறல் கதையில் ஒரு கோயிலில் இருக்கும் வேலையில் வைக்கப்படும் பூஜைப் பொருட்களும் அதனால் சமூகத்தில் ஏற்படும் எதிர் வினைகளும் பற்றி பேசுகிறது.
மிச்சமிருக்கும் . ஒருவன் என்ற லட்சுமி சரவணகுமாரின் கதை சிப்ட் முறையில் நெசவு ரிசர்வ் செய்யும் தொழிலாளரைப் பற்றி, இருக்கிறது ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகையான நெசவு தொழில் முறைகள் இருக்கின்றன .லட்சுமி சரவணகுமார் அவர் பகுதி நெசவாளர்கள் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார். அதில் வருகிற கூலி நெசவு செய்யும் ஒருவன் ஏழை. கூலி நெசவு செய்யும் ஒருவன் மீது மையம் கொள்ளும் ஒரு பெண்ணும் வருகிறார்கள். ஆனால் அவன் ஊருக்கு விடுமுறையில் சென்றவன் திருமணமாகி வருவதும் அவனுக்கு அந்த நெசவுக்கொட்டகையில் உள்ளவர்கள் கொஞ்சம் பணம் போட்டு அன்பளிப்பு தருவதும் என்று நெகிழ்ச்சியை தருகிற கதையாக இருக்கிறது.
வீதி சமைப்போர் என்ற வெண்ணிலாவின் கதையின் தலைப்பே சிறப்பாக இருக்கிறது. நெசவாளர்கள் பாவு போடுவதற்காக நிறைய நேரம் ஒதுக்குவார்கள் பலர் சேர்ந்து அதை செய்வார்கள் அப்படி பாவு போடுகிற நாளில் நடக்கிற விஷயங்களை அழகாகச் சொல்லி இருக்கிறார்
ஊடு பாபு என்ற கதையில் பாரவி அவர்கள் தஞ்சாவூர் பகுதி நெசவாளர்கள் வாழ்க்கையைப் பற்றி சொல்லுகிறார் அதில் கஷ்ட ஜீவனம் நெசவாளர்களோடு இணைந்து வருகிறது. தேநீர் கடைக்காரர்கள் வாழ்க்கையும் . தேர் பார்க்க போக முடியாமல் இருக்கிற அவஸ்தையும் பற்றி சிறப்பாக சொல்லியிருக்கிறார்.
கஞ்சி தொட்டி கதையில் சேலம் வின்செண்ட் அவர்கள் சேலம் பகுதி மக்களுடைய வாழ்க்கையை சொல்லுகிறார். ஒரு பகுதி நெசவாளர்கள் கன்னடம் பேசுபவர்கள். இந்த கதையில் பல உரையாடல்கள் கன்னடத்திலேயே வருவது சிறப்பாக இருக்கிறது நெசவாளர் சமூகத்தின் கஷ்டங்கள் பற்றி நிறைய பேசுகிறார் கன்னட உரையாடல்களும் கன்னட பாடல்களும் முக்கியத்துவம் பெற்றவையாக இருக்கின்றன. இந்த பிரச்சனையிலிருந்து மீள்வதற்காக போராடவும் வேண்டி இருக்கிறது என்பதை இந்த கதையிலே வின்சென்ட் அவர்கள் சொல்கிறார்
பல்லவி குமார் கதை : உதிரும் கனவுகள்;
கேரளாவுக்கு வேலைக்காக கணவன் போகிறான். நெசவு தொழில் நசிந்து போய் இருக்கிற நேரம்.
வெளியூர் போன கணவனை காணவில்லை அவனை தேடிப்போன மனைவியின் அனுபவங்கள் சொல்லப்படுகின்றன கணவனை நம்பிக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை என்று குழந்தைகளைக் காப்பாற்ற மனைவி ஒரு முடிவு எடுக்கிறாள். இருக்கிறதை வைத்துக் கொண்டு வாழும் வாழ்க்கை மனதில் வருகிறது
நெசவாளர் குடியிருப்பு என்ற கதையில் சொந்த வீடு வேண்டும் என்று ஆசைப்பட்டு குடியிருப்புகள் கட்ட இடங்கள் வாங்குகிறார்கள் அதனால் அவர்கள் படும் அவஸ்தைகளை சொல்லி இருக்கிறார் பா ராஜா.
ஜனநேசனின் கதையில் சிறுநீரகத்தை விற்று ஏமாந்து போகும் நெசவாளர்கள் சிலரின் அவலம்.
பாரதிநாதன் கதையில் நெசவாளியின் சினிமா கதாநாயகன் பற்றிய பிம்பம் உடைபடுவது பற்றியது. நல்ல கட்டுடைத்தல்.
பட்டுச்சேலை என்ற கதையில் காதலிக்காக பட்டு சேலையை நெய்கிறான் அவன். கல்யாண பட்டு சேலை ஆனால் காதல் நிறைவேறவில்லை நண்பன் ஒருவன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். இந்த சோகம் சொல்லப்பட்டிருக்கிறது
குலப்பெருமை என்ற கதை சீனிவாசன் எழுதியது கொரோனா காலகட்டத்தில் நெசவுத்தொழில் நசிந்து போய்விடுகிறது பலர் பல தொழிலுக்குப் போகிறார்கள் முடி வெட்டும் தொழிலை செய்யலாம் என்று ஒருவன் ஒருவன் நினைப்பது அவருடைய மன அவஸ்தையைச் சொல்லுகிற கதையாக இருக்கிறது.
அசோக் குமார், பல்லவி குமர் போன்றவருடைய நீண்ட கதைகளும் உள்ளன.
மிகுந்த சிரத்தையுடன் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்பு என்று இதை சொல்லலாம்.
நெசவாளர்களுடைய வாழ்க்கை தமிழகத்தின் பல்வேறு பகுதி சார்ந்த அவர்களுடைய வாழ்க்கை, நடை முறையில் கொஞ்சம் கொஞ்சம் மாறுபடுவது பற்றியும் அவர்களுடைய பிரச்சனைகளை பற்றியும் சிறப்பானக் கதைகளைக் கொண்ட தொகுப்பு இந்த தொகுப்பு.
இந்த தொகுப்பு போல் பல தொகுப்புகளை பொன்குமார் வெளியிட்டு வருகிறார். பணச் செலவு, உழைப்பு இதெல்லாம் பெரிய அளவில் தென்படுகிறது. அவர் தொடர்ந்து இது போன்ற முயற்சிகளில் இடவேண்டும் இந்த முயற்சிகளில் அவர் ஈடுபடுவதற்காகவே அவரை நாம் பாராட்ட வேண்டும்
( தொகுப்பாசிரியர் பொன் குமார்
வெளியீடு நிவேதா பதிப்பகம் ரூபாய் 240 )
சுப்ரபாரதிமணியன்
0
ஆட்டம் ATOM ஆவணப்பட விழா கோவையில்....
ஆட்டம் காண்கிறதா திருப்பூர் தொழில் உலகம்
சுமன் இயக்கிய திருப்பூரை பற்றிய ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதி மற்றும் பின்னலாடை சார்ந்த அதிபர்கள் புலம்பினார்கள். அழுது தீர்த்தார்கள் திருப்பூரில் இன்றைய நிலைமை பயம் தருகிறது. தொடர்ந்து தாறுமாக தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கும் பருத்தி, நூல் விலை, அதன் காரணமாக செயற்கை இலை ஆடை உற்பத்திகளுக்கு ஏற்பட்டிருக்கிற மவுசு. அவை மலிவாக இருப்பதால் நுகர்வோர் அவற்றை அதிகம் வாங்குவது
மத்திய அரசின் தொழில் கொள்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் பனியன் தொழில் வளர்ச்சி தொழிலாளர்கள் சிக்கல் என்று பலவற்றை இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்
உள்நாட்டு வணிகம் என்பது அதன் தலைப்பு. இரண்டு உற்பத்தியாளர்கள் பணி தொழில் சிக்கல் பற்றி பேசுகிறார்கள் ஒருவர் செகண்ட் ஃபீஸ் சார்ந்த தொழில் நடத்துபவர் முதலாளியாக இருந்து பல லட்சம் சொத்துக்களை இந்த தொழிலில் சமீப காலத்திய போக்குகளால் இழந்தவர் ஒரு சிறு மளிகை கடை நடத்தி தன் குடும்பத்தை காப்பாற்றுவதாக சொல்கிறார். தன் மகன்களுக்கு பள்ளிக்கு பணம் கட்ட கூட பணமில்லாமல் தவிப்பதாகவும் நன்றாக இருந்த காலத்தில் பல்வேறு உதவிகளை செய்து இருப்பதையும் திருப்பூரில் நிலைமை மிக மோசமாக இருப்பதையும் சொல்லி அழுகிறார் அவர் அழுவதை பார்த்து அவருடைய குழந்தைகளும் கண்ணீர் விடுகின்றன. திருப்பூர் நிலைமை எப்போது மாறும் என்ற கனவு அவருடைய கண்ணீரில் கரைந்து இருப்பதை இந்த படம் காட்டுகிறது
திருப்பூரின் இந்த வியாபாரம் போக்கு அவ்வப்போது நிகழும் ஏறிம் இறங்கும். ஆனால் இறங்கி கொண்டிருக்கும் திருப்பூரில் தொழில்முகத்தை இவர்கள் அதிர்ச்சி சார்ந்த விஷயங்களால் நிரப்பி இருந்தார்கள் .இந்த ஆவணப்படத்தில் பல்வேறு தரவுகள் பல்வேறு நேர்காணல்கள் மூலமாக திருப்பூர் நிலையை சொல்லியிருந்தார்கள்
திருப்பூர் செயற்கைஇழை உற்பத்தி மூலம் புது சந்தை உருவாக்கி இருக்கிறது ஆனால் பருத்தி துணிகளின் புறக்கணிப்பு என்பது எல்லோர் மத்தியிலும்.. பீதியான செய்திகளை கிளப்பி இருப்பதை இந்த ஆவணப்படம் குறிப்பிடுகிறது
இந்த திரைப்பட விழாவை தமிழக அமைச்சர் சாமிநாதன் அவர்கள் தூக்கி வைத்தார் நிறைவு விழாவில் ஆவணப்பட இயக்குனரும் ஜெமினி கணேசன் பேரனுமான அருண்வாடி மற்றும் பாண்டிச்சேரி ஆரோவில் இயற்கை காப்பாளர் சரவணன் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், பாரு கழகு இயக்கம் பாரதிதாசன், ஈரோடு சக்தி வேல் போன்றோர் கலந்து கொண்டார்கள் கோவை ரத்தனம் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஆவணப்பட விழாவில் உலக தரத்தில் பல முக்கியமான படங்கள் திரையிடப்பட்டன அவற்றை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் ..சுப்ரபாரதி மணியன்
சுற்றுச்சூழல் திரைக்கதைகள்
சுப்ரபாரதிமணியன்
1. இயற்கை எனும் இளையக்கன்னி.
கேரளா அட்டப்பாடி பள்ளத்தாக்கின் அருகிலான சைலண்ட் வேலி பள்ளத்தாக்கிற்கு சுற்றுலா செல்லும் தமிழக கல்லூரி பெண் ஒருத்தி அதன் அழகில் தன் மனதைப் பறி கொடுத்து விடுகிறாள்.அங்கு வாழ ஆசை ஏற்படுகிறது .
அங்குள்ள எளிமையானக் குடும்பத்தைச் சார்ந்தவனைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள்.
பின்னால்..
அந்தப்பகுதியின் நிலங்கள் பழையபடி அதன் மூதாதையரான பழங்குடிகளுக்குத் தரப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு அவர்களை கலங்கடிக்கிறது.
அங்கிருந்து காலி செய்ய வேண்டியிருக்கிறது அங்கு தாங்கள் வளர்த்த மரங்களை எதற்காக அப்படியே விட்டுச் செல்வது என்று வெட்டி காசாக்கி விட்டு அங்கிருந்து காலி செய்ய எண்ணி மக்கள் மரங்களை வெட்ட மரங்களற்ற அந்தப்பகுதி சூடான பகுதியாகிறது.
பிரசவத்திற்கு சென்ற மனைவி அங்கு குழந்தையுடன் மீண்டும் வர மறுக்கிறாள். காடுகள் மரங்கள் அழிக்கப்பட்ட வெப்ப பூமியை தான் விரும்பவில்லை.. தான் விரும்பியது இயற்கை சூழல் உள்ள பகுதி என்று தன் முடிவை கணவனிடம் சொல்கிறாள்..பிரிந்து போகத் தயாராகிறாள். அப்போது என்ன நடந்தது அங்கு ..
சாயத்திரை
(சுப்ரபாதிமணியின் சாயத்திரை நாவல் சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் பரிசு பெற்றது. இந்தி, வங்காளம், மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பாகி வந்துள்ளது. இது கஸார்கள் பிரதி * )
கதைச்சுருக்கம்:
வெளிநாட்டிலிருந்து பின்னலாடை துறை ஆய்வு சார்ந்த வரும் ஒரு வழிகாட்டு பெண்ணின் பார்வையில் ஆரம்பமாகிறது. அவளுக்கு வழிகாட்டும் பக்தவச்சலம் என்பவனின் பனியன் கம்பெனி மற்றும் வேலையில்லாத வாழ்க்கை என ஓடுகிறது
ஆனால் இடம்பெயர்ந்து வந்து அங்கிருக்கும் ஜோதிமணி என்ற பெண்ணுடன் அவன் சேர்ந்து வாழ்ந்து வருகிறான். அந்தப் பெண்மணி கணவனிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறாள். ஒரு லட்சம் கோடி அன்னிய செலவாணி வருமானத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் திருப்பூரில் சாயக்கழிவுகள், நதிநீர் மாசு என்பதை பற்றிய பார்வைகள் திருப்பூர் விளிம்பு நிலை மனிதர்களின் நோக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. சுற்றுசூழல் பாதிப்பும் மக்களின் அவல் நிலையும் தொழில் தாறுமாறாக சூதாட்டமாக போய்க் கொண்டிருப்பதும் அதில் பகடைக்காய்களாக சாதாரண தொழிலாளர்கள் இருப்பதும் இந்த கதையில் மையமாக இருக்கிறது.
(* கஸார்கள் : பெரும் வல்லரசுகள் அல்லது பெரும் மதங்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்ட நிச்சயமற்ற எதிர்காலத்துடன் கூடிய சிறுபான்மை மக்களின் குறியீடு. சுற்றுச்சூழலில் நச்சாக்கப்பட்ட ஒரு கால கட்டத்தில் வாழும் நாம் எல்லோருமே கஸார்களே- செர்பிய எழுத்தாளர் மிலோராட் பாவிச் எழுதிய புகழ் பெற்ற நாவல் “ கஸார்களின் அகராதி “ )
0
நொய்யல் ஆற்றங்கரை ஓரத்திலே...
நதி மகிழ்ச்சியை தருகிற இடமாக இருக்கிறது. ஆனால் இன்று கழிவுகள் ஓடக்கூடிய இடமாக மாறிவிட்டது. அந்த நதியில் ரத்த ஆறுகளும் கல்ந்து ஓடுகின்றன.
இரண்டு வெவ்வேறு சாதிகளை சார்ந்தவர்கள் நண்பராக இருந்து பனியன் வியாபாரத்தில் பெரிய பணக்காரர்கள் ஆக இருக்கிறார்கள். சிறிய பிரச்சனைகள் காரணமாக பிரிந்து போகிறார்கள்.ஆனால் அவர்களின் ரத்த உறவுகள் ஆண்களும் பெண்களும் சிறுவயது முதல் நட்போடு இருக்கிறார்கள் .காதல் புரிகிறார்கள்.
காதலுக்கு சாதி தடைதானே .சாதி பிரச்சனை காதலர்கள் காரணமாக பல வழக்குகளை உண்டு பண்ணுகிறது.
அந்த ரத்த உறவுகள், காதல் என்ன ஆகிறது. காதலர்களை இரு சாதிகளைச் சார்ந்த பணக்காரர்கள் அனுமதித்தார்களா. ரத்தம் ஓட விட்டார்களா. காதலர்கள் என்ன ஆகிறார்கள். நதி இது எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா?
-0
( பூமிக்கு மனிதன் தலைவனா )
கிராமத்துப் பள்ளிக்கூடம். அருகில் நீர்நிலைகள்.இயற்கையை காக்க வேண்டும் என்று ஆசிரியர் பாடம் எடுக்கிறார். முன்பு இந்த இடத்தில் கடல் நீர் வந்து சூழ்ந்து கொண்டது. ஆகவே அங்கிருந்து பள்ளிக்கூடத்தை வேறு இடத்துக்கு மாற்றுகிறார்கள்.படகில் போய் படித்த குழந்தைகள் வேறு இடத்திற்கு போக வேண்டி இருக்கிறது படகோட்டிகள் கூட செத்துப் போகிறார்கள்.
இந்த நிலையில் அந்தப் பள்ளியில் படித்த ஒருவன் வளர்ந்து ஆசிரியராக வருகிறான்.
இப்போது உலகம் வெப்பமய சூழலில் எல்லாம் தலைகீழாக மாறி கொண்டிருக்கிறது. தீவில் உள்ள பள்ளிக்கூடம் மூடப்போகிறது. உலகம் முழுக்க வெப்பமய சூழலில் பல தீவுகள் மற்றும் அவற்றில் உள்ள பள்ளிகள் காணாமல் போகின்றன.. அனைவருக்கும் பள்ளிக் கல்வி என்பதும் கேள்விக்குறியாகிறது. ... மக்களின் பரிதவிப்பு காலநிலை மாற்றத்தால் என்ன ஆனது..
0
நாடோடி காற்று"
காட்டுப்பகுதி. மக்கள் ஆடு, மாடு மேய்த்தும் சிறு அளவில் விவசாயம் செய்தும் வருகிறார்கள். கால்நடைகள் மாமிசத்திற்காக கடத்தப்படுவது, கொல்லப்படுவது அவர்களுக்கு அதிர்ச்சி.
பாறுக்கழுகுகள் உள்ள பகுதி அது. . அவை இறந்த கால்நடைகளை தின்னும். கால்நடைகளுக்கு வைத்தியமுறையில் தர்ப்படும் மருந்துகள் ரசயானக்கலப்பாகி அவை இறக்கும் போதும் பாறுக்கழுகுகள் உண்கின்றன. ஆனால் ரசாயனக்கலப்பால் அவை சாகின்றன. குறைந்து வருகின்றன. இதை அறிந்து விசப்படும் மக்கள் ரசாயனம் உபயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எதிர்ப்பு தெரிவிக்கிறவர்கள் அங்கே நீடிக்க முடிந்ததா. காலம் அவர்களைக் காட்டுக்குள் விட்டு வைத்ததா
எனக்கு திருக்குறளை காதில் போட்டு வைத்த இருவர்
ஒருவர் பேராசிரியர் சண்முகசுந்தரம்
இவர் எம் எஸ் சி படித்துவிட்டு என்னுடைய ஆரம்ப கால பட்டதாரி படிப்பில் கணிதம் எடுத்தார் .இவர் கணித பேராசிரியர்.. ஆனால் கணிதவகுப்பில் பாரதியார் பாரதிதாசன் திருக்குறள் என்று பல விஷயங்களை வகுப்பு முடிந்த பின் கலவையாக்கிதந்து தீர்ப்பார்.
இவர் கொங்கு மண்டலத்தின் வட்டார இலக்கிய தந்தை ஆர். சண்முகசுந்தரத்தின் தம்பி மகன் இவர் அடிக்கடி திருக்குறளை பற்றி சொல்லிக் கொண்டிருப்பார் அது என்னை மிகவும் பாதித்தது
பிறகு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரிநூலகத்தில் திருக்குறள் பேழை.. தினந்தோறும் ஒரு அதிகாரத்தை புதுப்பித்து வைப்பார்கள் அதைப் பற்றி எழுதியவர்களுக்கு பரிசு உண்டு .அந்த வாசிப்பு அனுபவங்களை நான் எழுதினேன் ஆண்டுதோறும் எனக்கு திருக்குறள் பேழை பரிசு கிடைத்தது
இன்னொரு சண்முகசுந்தரம் நான் பிசப்பு உகாரசாமி உயர் நிலப் பள்ளியில் படித்த போது தமிழாசிரியராக இருந்தார். அவர் வியாழக்கிழமைகளில் சாய்பாபா பக்தராக தன்னை காட்டிக் கொண்டு கையேந்தி வகுப்பில் மாணவரிடம் காசுகள்கேட்பார் கையிலுள்ள காசுகளை மாணவர்கள் அவரிடம் தருவார்கள் அப்படி சேர்த்த தொகையை ஆண்டுக்கு ஒரு முறை கல்வித் தொகை கட்ட முடியாமல் இருக்கிற ஏழை குழந்தைகளுக்கு தருவார்
அவர் செயல் மிகவும் உயர்ந்தது அவர் வகுப்பில் நுழையும் போதும் பின்னால் வகுப்பு முடிகிறபோதும் திருக்குறளை சொல்லி அதன் கருத்தை சொல்லுவார்
இந்த இரண்டு சண்முக சுந்திரங்களும் என் காதில் திருக்குறளை விழவைத்த பெருமை கொண்டவர்கள்
இன்றைய திருக்குறள் உரையில் நான் இதைப் பற்றி பேசினேன்
2
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் பாலஸ்தீன பயணத்தில் 3000அடி உயர ஒலிவிய மலைக்குச் சென்றேன்.
இயேசுவின் பிரசங்கங்களில் முக்கியமான இடம்.அங்கு இயேசுவின்10 கட்டளைகளை 23 உலக மொழிகளில்எழுதியிருந்தனர். இந்திய மொழியில் தமிழில் எழுதப்பட்டிருந்ததைச் சொன்னார் கள்
இஸ்ரேலில் சில இடங்களில் திருக்குறள் எழுதப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள்
இஸ்ரேலியர்கள் திருக்குறளை சரியாகப்படித்திருந்தால்
காஸாவில் உங்களைப்போன்ற பள்ளிக்குழந்தைகள் இன்று பட்டினி கிடக்கும் நிலை வந்திருக்காது
00000
எனக்கு திருக்குறளை காதில் போட்டு வைத்த இருவர்
ஒருவர் பேராசிரியர் சண்முகசுந்தரம் இ
சுப்ரபாரதிமணியன்
0
தொட்டால் கை மணக்கும் என்றார்கள்
கேட்டால் செவி மணக்கும் என்றார்கள்
பேசினால் வாய் மணக்கும் என்றார்கள்
படித்தல் கண் மணக்கும் என்றார்கள்
நினைத்தால் நெஞ்சு மணக்கும் என்றார்கள்
அப்படி மனம் நிறைத்து
எண்ணும் எழுத்தும் கண் என்று வாழ்வோரை அடையாளம் காட்டியது ( பொருள் ) திருக்குறள்
வாழும் நல்லார்க்கு
அறிவியலும் கலை இயலும் சிறந்த கண்கள்
என்றது அது.
கற்றதை பழுதறக் கற்றலும்
மற்றும் கடை பிடித்தலும்
உடம்பு போல் திடம் தரும் என்று காட்டியது
நல்ல வாசகர்
நல்ல தலைவருக்கான அடையாளம் என்று
சொன்ன உலக மாந்தர் அடையாளம்
நம் முக அடையாளம் (பொருள்) திருக்குறள்
உன்னை மறவாதிருக்க எதையாவது எழுத்தில்
பதிவு செய் என்றது குறள்.
இல்லையெனில் பிறர் எழுத சில நற்செயல்களைச் செய்து விட்டுப் போ என்றும் சொன்னது குறள்
0
சுப்ரபாரதிமணியன் 9486101003
பள்ளிக்கூடம் போகலாமா? என்னும் திரை நாவல்
பேரா. கருநல் . பன்னீர்செல்வம்* ஈரோடு ( அரசு கலைக்கல்லூரி , ஈரோடு )
0
கதாவிருது பெற்ற படைப்பாளர், சுப்ரபாரதிமணியன் அவர்களின் "பள்ளிக்கூடம் போகலாமா? என்னும் திரை நாவல் (புதினம்) வெளியீடு ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது. ஸ்டாலின் குணசேகரன் முன்னிலை வகித்தார்.என் சி பி எச் பதிப்பகத்தின் பொன் விழா சாதனைகளைப் பட்டியலிட்டார்
*அவ்விழாவில் 50 நூல்கள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று தான் "பள்ளிக்கூடம் போகலாமா?"*
சுப்ரபாரதிமணியன் திரை நாவல் என்ற வடிவம் பற்றியும் திரைத்துறையும் ஆட்சி அதிகாரம் பற்றியும் பேசினார்.
"பள்ளிக்கூடம் போகலாமா? *60 பக்க குறும் புதினம். அழுத்தமான, வலி நிறைந்த வாழ்வியலைப் பேசுகிறது.*
*நம்மில் பெரும்பாலோனோர் நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கிறோம்.*
*அது குறித்து மனதில் பட்ட சொற்கற்களை எடுத்து உடனே வீசியும் விடுகிறோம். அதனால் பலர் மனம் புண்ணவதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.*
*ஆனால், ஒரு படைப்பாளி அப்படிக் கடந்து போகிறவன் அல்ல. நாணயத்தின் மறுபக்கத்தைத் தடவிப்பார்த்து அதிலுள்ள மேடு பள்ளங்களை உணர்ந்து, அதை உரக்கச் சொல்பவனே படைப்பாளி ஆவான்!*
*தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் வடமாநிலத் தொழிலாளர் வாழ்வியல் மிகவும் சிக்கல் நிறைந்தது என்பதை எத்தனை பேர் உணர்ந்துள்ளோம் என்பது தெரியவில்லை.*
*நம்மவர்களின் சோம்பேறித்தனத்தாலும், வறட்டுப் பெருமையாலும் விட்ட இடத்தை, அவர்கள் இட்டு நிரப்பிக்கொண்டு உள்ளார்கள் என்பதுதான் உண்மை!*
*வறுமைக்குப் பயந்து வந்த கடுமையான உழைப்பாளிகள் என்ற உண்மை ஒரு புறம் இருப்பினும், வடக்கே உள்ள சாதிக்கொடுமைகளுக்குப் பயந்து வந்தவர்கள் என்னும் உண்மைக்கு ஒளிக்கீற்றுப் பாய்ச்சி வெளிக்காட்டுகிறது இப்புதினம்.*
*இந்த உண்மை புரியாத சில ஆசியர்களால் தமிழ்நாட்டில் கல்வி பெறுவதில் வடவர் குழந்தைகளுக்கு ஏற்படும் நெருக்கடிகளையும் அவர்களது வாழ்க்கைப் போராட்டங்களையும் புதினம் வெளிப்படுத்தத் தவறவில்லை!*
வட மாநிலத் தொழிலாளர்கள் குழந்தைகளின் படிப்பு சார்ந்தும் அவர்களுக்கு கல்வி தரப்படாமல் இருக்கும் தமிழக கல்விச்சூழல் பற்றிய விமர்சனமாகவும் இந்த புதினத்தை எடுத்துக் கொள்ளலாம்.அவர்களுக்கு கல்வி சென்றடையாத மொழி, கலாச்சார சிக்கல்கள் பற்றிப் பேசுகிறார். இதில் இடம் பெறும் வடமாநில பெண்களின் துயரங்களும் கல்வியில் அக்கறை கொண்ட இளைஞன் ஒருவனின் சில முயற்சிகளும் சொல்லப்பட்டுள்ளன
*வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதை, வடவர்களே வாய்ச்சான்றாகக் கூறும்படியாகயும் ஆசிரியர் சுப்ரபாரதிமணியன் படைத்திருக்கும் இப்புதினத்தைப் படிக்க வேண்டும் அனைவரும்!*
*-பேரா. கருநல் . பன்னீர்செல்வம்* ஈரோடு ( அரசு கலைக்கல்லூரி , ஈரோடு )
( விலை ரூ 70 என் சி பி எச் பதிப்பகம் , சென்னை)
*08-08-2025*
சுப்ரபாரதிமணியனின் திரில்லர் திரைப்படங்கள்
- தூரிகை சின்னராஜ்
சுப்ரபாரதி மணியனின் பல கதைகள் தமிழ்த்திரைப்படங்களில் தழுவப்பட்டு வெளிவந்துள்ளன, பல கதைகள் திருடப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
“ வட போச்சே “ என்று அலறிக் கொண்டிருப்பதை விட வடையை சுட்டு எப்படி தழுவுபவர்களுக்கு, திருடுபவர்களுக்கு நேரடியாகத் தரும் விஷயத்தை சமீப காலமாக சுப்ரபாதிமணியன் அவர்கள் செய்திருக்கிறார்,
அப்படித்தான் இதுவரை அவரின் பத்து திரைக்கதை நூல்கள் வெளிவந்திருக்கின்றன, அவற்றில் சுமார் 100 திரைக்கதைகள் உள்ளன ,
இந்த திரில்லர் திரைக்கதை நூல் வரிசையில் 5 திரில்லர் திரைக்கதைகள் உள்ளன இவை பல திரைக்கதைகள் திரைப்படங்களாகும் முழு தகுதி பெற்றவை. எளிமையான வடிவங்களில் குறைந்த காட்சிகளை வைத்து எழுதப்பட்டுள்ளன.. இவற்றை இன்னும் விரிவுபடுத்தி முழு திரைக்கதைகளை உருவாக்கிக் கொள்ளலாம்
சுப்ரபாரதி மணியன் அவர்களுடைய படைப்பிலக்கிய உழைப்பின் இன்னொரு பகுதியாக இந்த திரைக்கதைகளைச் சொல்லலாம். சிறுகதை நாவல் போன்ற படைப்பிலக்கிய வடிவங்களில் இருந்து மாறுபட்டு வேறு வடிவ முயற்சியில் இந்த திரைக்கதைகள் அமைப்பு உள்ளன என்று அவர் கூறி வருகிறார்
ஒவ்வொரு படைப்பாளிக்கும் இதுபோல் சில தேக்கங்கள் ஏற்படுகிற போது வேறு வடிவத்திற்கு சென்று எழுதுவது என்பது இயற்கை. தான். அப்படித்தான் சிறுகதை, நாவல் என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் இப்போது திரைக்கதை என்ற ஒரு புதிய வடிவத்திலும் இயங்கிக் கொண்டு இருக்கிறார்
இந்த திரில்லர் திரைக்கதை நூலில் 5 திரைக்கதைகள் உள்ளன. .இவற்றை எடுத்துக் கொண்டுள்ள முக்கியமான மையங்கள். இன்றைய திரைப்பட உலகங்களுக்கு தேவையான விஷயங்க.ள் இதில் உள்ளன. ஜாதி பிரச்சனை, காதல் பிரச்சனை முதற்கொண்டு வாழ்வியல் அனுபவங்கள் பலவற்றை இதில் திரைக்கதைகள் ஆக்கியிருக்கிறார். படைப்பில் வித்யாசத்தன்மை காட்டும் அவரின் வித்தியாசத்தன்மை உள்ள திரைக்கதைகளில் உள்ளன இந்த நூலில் திரில்லர் வகை திரைகதைகளைத் தந்துள்ளார்.
முதல் திரைக்கதை அவரின் ஒரு நாவலை ( 14/40 கொண்டை ஊசி வளைவு ) எடுத்துக் கொண்டு அதை திரில்லர் கதையாக்கியிருக்கிறார் .
மற்றவை அவரின் புதிய களன்களைக் கொண்டவை.
இளைஞர்களின் வேலையின்மை மற்றும் அலைக்கழிதல் அவர்களை பிரச்சினைகளுக்குள் மாட்டி அலைக்கழிப்பதை இன்னொரு திரைக்கதை சொல்கிறது.
முரண்களை மையமாகக் கொண்டு நல்ல திரைக்கதை திருப்பங்களை இவை கொண்டிருக்கின்றன. மருத்துவ ஊழல் சார்ந்த ஒரு திரைக்கதையும் முக்கியமானது
இயக்குனர் தங்கம் சமீபத்தில் ஒரு கருத்தை சொல்லியிருந்தார் : “ சுப்ரபாரதி மணியனின் இப்படி திரைக்கதைகளை நூலாக வெளியிட்டு இருக்கிறார். இதில் எத்தனை திரைப்படங்கள் ஆகுமோ. எத்தனை திரைக்கதைகளத் தழுவி படம் எடுப்பார்களோ எத்தனை திரைக்கதைகளை அப்பட்டமாக காப்பியடித்து திரைப்படம் எடுப்பார்களோ. சுப்ரபாraதிமணியின் எத்தனை வழக்குகள் போடுவாரோ” என்று ஒரு உரையில் குறிப்பிட்டு இருந்தார்.
இன்னொரு கருத்து இயக்குனர் ஞானராஜசேகரன் IAS இப்படி குறிப்பிடுகிறார் :
“ திரைக்கதைக்கு அடிப்படை முரண் அல்லது CONFLICT என்பதை தெளிவாக புரிந்துகொண்டு திரைக்கதைகளை எழுதியிருக்கிறீர்கள்..
ஆனால் தமிழ் சினிமாவில் திரைப்படத்தைக்
குறித்து புரிதல் ஒன்றுமின்றி தாறுமாறாக வடிவமைத்து வைத்திருக்கிறார்கள்.
உங்களைப்போன்ற
GENUINE கதையாசிரியர்களை
அவர்கள் எப்படி அணுகுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் திருடுவதற்கு
நிச்சயம் முனைவார்கள்
என்பதில் சந்தேகமில்லை.”
அது உண்மைதான் இந்த திரைக்கதைகள் நல்ல தமிழ் திரைப்படங்களாக ஆகும் தகுதி கொண்டவை. இந்த திரைக்கதைகளை படிக்கிற போது தமிழ் திரை உலகம் எப்படி இருக்கிறது என்பதும், கதை பஞ்சத்தில் இருக்கிற தமிழ் திரை உலகம் எப்படி வெவ்வேறு வகையான கோணங்களில் இவ்வகைமையங்களை எடுத்துக் கொள்ள முடியும் என்பதற்கு அத்தாட்சியாக இந்த திரைக்கதை நூல் அமைந்திருக்கிறது.---- தூரிகை சின்னராஜ்
( தூரிகை சின்னராஜ் – ஓவியர்/ ஆசிரியர்/ குழந்தைகள் நூல் உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். அவரின் பல ஓவியக்கண்காட்சிகள் நடைபெற்றுள்ளன )
( ரூ 220 கோரல் ப்ப்ளிசர்ஸ், சென்னை
பிரதிகளுக்கு : 90430 50666)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

